#EarthQuake:பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் சுலவேசி,கோடமோபாகுவில் இருந்து 779 கிமீ தொலைவில் இன்று காலை 6.53 மணியளவில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்துள்ளது.
அதைப்போல பிலிப்பைன்சின் மனாய் பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.குறிப்பாக பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கமே இந்தோனேசியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.எனினும்,உயிரிழப்புகள்,பொருட் சேதங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
Earthquake of Magnitude:6.0, Occurred on 19-04-2022, 06:53:13 IST, Lat: 7.20 & Long: 127.0, Depth: 50 Km ,Location: 779km NNE of Kotamobagu,Sulawesi,Indonesia for more information Download the BhooKamp App https://t.co/0AwA3ydFG5 @ndmaindia @Indiametdept pic.twitter.com/pRRmw9mGTZ
— National Center for Seismology (@NCS_Earthquake) April 19, 2022