ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜப்பானில் உள்ள ஹொன்ஷுவிற்கு தென்கிழக்கே ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியே 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்துள்ளதாகவும் ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.