தேர்தல் காரணமாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று டாக்டர்.கோலமாவு கோகிலா பட இயக்குனரான நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படத்திலிருந்து வெளியான செல்லம்மா, நெஞ்சமே,so baby ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த டாக்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் சமீபத்தில் டாக்டர் படத்தினை மார்ச் 26-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.ஆம் நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுவதாகவும் , படக்குழுவினர் அனைவரிடமும் பேசி விரைவில் டாக்டர் படத்தின் அடுத்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது சிவகார்த்திகேயன் ரசிகர்களைடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…