உருமாறிய கொரோனாவின் வீரியம் குறையும் வரையில் கர்ப்பமாவதை தள்ளிப் போடுமாறு இளம் தம்பதிகளுக்கு பிரேசில் அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்தியாவில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாம் அலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மற்ற பல நாடுகளில் உருமாறிய கொரோனாவால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பிரேசில் நாட்டில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் பிரேசிலில் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் இன்றி அந்நாடு திணறி வருகிறது.
இந்நிலையில், கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு வரும் பொழுது அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பச்சிளம் குழந்தைகளும் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் கோர சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதுவரை அங்கு கொரோனவால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பிரேசிலில் உயிரிழந்துள்ள நிலையில், தினமும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர்.
குறிப்பாக கருவுற்ற சில நாட்களிலேயே பெண்கள் கொரோனவால் பாதிக்கப்படுகின்றனராம். ஏற்கனவே மருத்துவமனைகள் முழுவதிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழியும் சூழலில் கர்ப்பிணிகளும் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்று அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதால் உருமாறிய கொரோனாவின் வீரியம் குறையும் வரையிலும் இளம் தம்பதிகள் கருவுறுதலை தள்ளிப் போடுமாறு பிரேசில் நாட்டின் சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…