துல்க்கர் சல்மான் அடுத்து நடிக்கவிருக்கும் தெலுங்கு படத்தின் போஸ்ட்ர் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் துல்க்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். அவை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது. இவர் தற்போது மலையாளத்தில் குறூப், தமிழில் ஏய் சினாமிகா உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார்.தெலுங்கில் ‘மஹாநடி’ படத்தை அடுத்து எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த துல்க்கர் தற்போது ஒரு புதிய தெலுங்கு படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.
அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை நேற்றைய தினம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். வைஜெயந்தி மூவிஸ் வழங்கும் இந்த படத்தை ஸ்வப்னா சினிமாஸின் பிரியங்கா தத் மற்றும் ஸ்வப்னா ஆகியோர் தயாரிக்கின்றனர். ஹனு ராகவாபுடி இயக்கவுள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படம் 1964ம் ஆண்டின் காதல் கதையாக உருவாகவுள்ளது.
துல்க்கர் ராணுவ வீரர் தோற்றத்தில் இரண்டு கைகளும் ஒன்றாக இணைந்திருப்பது போன்றும் உள்ள அந்த போஸ்ட்ரில் ராணுவ வீரன் ராம் போரூற்றி எழுதிய காதல் கதை என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் போர் பின்னணியில் உருவாகும் ஒரு காதல் கதையாக இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. தற்போது அந்த போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…