மகேஷ் பாபுவுடன் மாஸ்டர் JD.! இசையமைப்பாளர் தமன் வெளியிட்ட போஸ்டர்.!

மகேஷ் பாபுவுடன் மாஸ்டர் படத்தில் உள்ள விஜய் புகைப்படத்தை வைத்து போஸ்டர் ஒன்றை ரசிகர்கள் எடிட் செய்துள்ளனர்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு இயக்குனர் ரசுராம் இயக்கத்தில் தற்போது ‘சர்காரு வாரி பாட்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தை மகேஷ் பாபுவே தயாரிக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வெளியீடப்பட்டது. வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் அல்லது டீசர் வெளியாக வாய்ப்புள்ளது.
இதனையடுத்து மகேஷ் பாபுவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், டிவிட்டரில் #SuperStarBirthdayBLASTER என்ற ஹஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சர்காரு வாரி பாட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மகேஷ் பாபுவுடன் மாஸ்டர் படத்தில் உள்ள விஜய் புகைப்படத்தை வைத்து போஸ்டர் ஒன்றை ரசிகர்கள் எடிட் செய்துள்ளனர். இதனை பார்த்த பிரபல இசைமையைப்பாளர் தமன் அந்த போஸ்ட்டரை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Wahhhh !! Saw this jus NOOOW !! #ThalapathyVijay #SuperstarMahesh #SuperStarBirthdayBLASTER ???????????????????? pic.twitter.com/YqbGGkQYDS
— thaman S (@MusicThaman) August 6, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025