நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை..!
மும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை.
பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணருவம், ணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, மும்பையில், ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதனை செல்போன் செயலி மூலம் விநியோகம் செய்ததாக மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ராஜ் குந்த்ரா எதிராக அணைத்து சான்றுகள் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு வரும் 27-ஆம் தேதி வரை போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜ் குந்த்ராவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டியிடம் ஆபாச பட வழக்கில் தொடர்பு குறித்து விசாரிக்க முடிவு செய்து நேற்று ஜூகுவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்றனர். அங்கு, தீவிர விசாரணை நடத்தி விட்டு, வீட்டை சோதனை செய்துவிட்டு ஒரு மடிக்கணினியையும் பெற்று சென்றனர். கணவர் ராஜ்குந்த்ராவின் நிறுவனங்களில் ஷில்பா ஷெட்டி இயக்குனராக இருந்ததால் விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது.