இனி ஃபேஸ்புக்கில்,செய்தியை முழுவதும் படிக்காமல் பகிர முடியாது!!
பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக்,”ரீட் ஃபர்ஸ்ட்”(Read First) என்ற புதிய வசதியை நேற்று சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஃபேஸ்புக்கில் இனி செய்தியை முழுவதும் படிக்காமல் பகிர முடியாது.
பிரபல சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி,பயனர்கள் செய்திகளை பகிர்வதற்கு முன்பு அதை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறது.
அதாவது,பயனர்கள் ஒரு செய்தியின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு அதை அப்படியே மற்றவர்களுக்கு பகிர முயன்றால்,செய்தியை முழுவதும் படிக்காமல் தங்களால் பகிர முடியாது என்று திரையில்(display) ஒரு பாப்-அப் தோன்றுகிறது.
Starting today, we’re testing a way to promote more informed sharing of news articles. If you go to share a news article link you haven’t opened, we’ll show a prompt encouraging you to open it and read it, before sharing it with others. pic.twitter.com/brlMnlg6Qg
— Facebook Newsroom (@fbnewsroom) May 10, 2021
மேலும்,இந்த புதிய வசதி போலியான செய்திகளின் தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவும் மற்றும் பயனர்கள் செய்திகளை முழுமையாக படிக்கவும் ஊக்குவிக்கும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக,ஃபேஸ்புக்கின் இந்த புதிய சோதனை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்களில் சோதிக்கப்படுகிறது.மேலும்,இது சோதனை முயற்சி என்பதால் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி உடனடியாக கேட்கப்படாது,ஆனால்,இது வரும் நாட்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைப்போன்று,கடந்த வாரம் ட்விட்டர் நிறுவனம் ட்வீட் செய்வது குறித்து ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.