#Breaking:பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ஐசியூவில் திடீர் அனுமதி!
மும்பை:பிரபல பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற பாடகியும்,”இந்தியாவின் இசைக்குயில்” எனப் போற்றப்படுபவருமான லதா மங்கேஷ்கர்,தனது நான்கு வயது முதல் தற்போது வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் நீடித்து வருகிறது.
இந்நிலையில்,லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,அவரது வயதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக மட்டுமே ஐசியுவில் வைக்கப்பட்டுள்ளார் என்றும்,தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவரது மருமகள் ரச்சனா என்பவர் தெரிவித்துள்ளார்.
“She is doing fine; has been kept in ICU only for precautionary reasons considering her age. Please respect our privacy and keep Didi in your prayers,” singer Lata Mangeshkar’s niece Rachna to ANI
— ANI (@ANI) January 11, 2022
லதா மங்கேஷ்கர் அவர்கள்,பத்ம பூஷன் விருது,தாதா சாஹேப் பால்கே விருது என பல்வேறு விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.