மேக்னா ராஜ் அவர்களின் கணவரான சிரஞ்சீவி சார்ஜா இன்று மாரடைப்பால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
2010ஆம் ஆண்டு காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் மேக்னா ராஜ். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகரான ஜெர்ரி நடித்திருந்தார். இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை இன்றைய காலகட்டத்திலும் அனைவரது பேவரட்டாக உள்ளது. தமிழ் சினிமாவில் அதிக படங்களை நடிக்கா விட்டாலும், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார் . அதன் பின்னர் அவர் 2018இல் கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜா ‘Vayuputra’ என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து ராஜமார்தாண்டா, ஏப்ரல், ரணம் உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார்.
இவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களின் மருமகனும், துருவ் சார்ஜா அவர்களின் சகோதரரும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நான்கு படங்களில் நடித்து கொண்டிருக்கும் சிரஞ்சீவி சார்ஜா திடீரென மாரடைப்பால் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை மூச்சு திணறல் காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.39 வயது மட்டுமே ஆன சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் திரையுலகில் உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பல பிரபலங்கள் சிரஞ்சீவியின் குடும்பத்திற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம்…
மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில்…
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 2,778 நியாய…
அமெரிக்கா: ஹே சிரி... இதை செய், ஹே சிரி... அதை செய்... என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில்…
கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி…