தெலுங்கில் துல்க்கருடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை.!
அல்லு அர்ஜுன், மகேஷ் பாபுவிடம் நடித்து வருகிறார். இவர் துல்க்கருக்கு ஜோடியாக நடிப்பாரா என்று வரும் நாட்களில் தெரிய வரும்.
துல்க்கர் சல்மான், மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் தமிழில் ஒரு சில படங்களே நடித்தாலும் அவை அனைத்தும் மிக பெரும் வெற்றியை மட்டுமே பெற்றிருந்தது. சமீபத்தில் துல்கரின் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் தற்போது மலையாளத்தில் குறூப், தமிழில் ஏய் சினாமிகா உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் தெலுங்கு வெளியிட்டீற்காக சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற போது, விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க போவதாக அறிவித்திருந்தார். இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்து விட்டதாகவும், தற்போது இயக்குநர் நடிகை, நடிகர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க திட்டமுட்ள்ளதாகவும், அதற்காக அவரை அணுகியதாகவும் கூறப்படுகிறது. தற்போது பூஜா பிரபல முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ் பாபுவிடம் நடித்து வருகிறார். இவர் துல்க்கருக்கு ஜோடியாக நடிப்பாரா என்று வரும் நாட்களில் தெரிய வரும்.