ஆபாச பட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகையின் கணவர் கைது.!

Default Image

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ, விஜய் நடித்த குஷி உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும், ஜான்வார் , பாஷிகர், தட்கான், உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவரது கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதனை செல்போன் செயலி மூலம் விநியோகம் செய்ததாக  கடந்த பிப்ரவரி மாதம் மும்பை போலீசார் ராஜ் குந்த்ரா மீது வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவீர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில், ராஜ் குந்த்ராவை, மும்பை குற்றப்பிரிவு போலீசார், நேற்று கைது செய்துள்ளனர். ராஜ்குந்த்ரா, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கு ஆபாச படங்களை தயாரித்து அனுப்பி வைத்துள்ளதாகவும், அவருக்கு எதிராக தேவையான ஆதாரங்கள் உள்ளதாலும் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆபாச பட வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்