சந்திரமுகி-2 ல் ஜோதிகாவிற்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகை.!
சந்திரமுகி -2 வில் தற்போது ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக பி. வாசு கூறியிருந்தார். கதாநாயகனாக அந்த படத்தில் முன்னணி ஹீரோ ராகவா லாரன்ஸ் தான் நடிக்கவுள்ளார். மேலும் லாரன்ஸிற்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பதாக தகவல் வெளியானது மேலும் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் இதில் வேட்டையனாக நடிக்கவுள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்திருந்தார்.
மேலும்சந்திரமுகி 2 படத்திலும் ஜோதிகாவை நடிக்க வைக்க கோரி அவரை அணுகியதாகவும்,ஜோதிகா இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் ஜோதிகா சமீபத்தில் அளித்த பேட்டி தன்னை சந்திரமுகி 2 ல் நடிக்க கோரி யாரும் அணுகவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சந்திரமுகி படத்தில் சிம்ரன் தான் நடிக்கவிருந்தார். சில நாட்கள் படப்பிடிப்பிற்கு பின்னர் சிம்ரன் கர்ப்பமான காரணத்தினால் அந்த படத்திலிருந்து விலகியதும், அதனையடுத்து தான் ஜோதிகா நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்திரமுகி 2 ல் சிம்ரன் நடிக்கிறாரா இல்லையா என்பதை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று கருதப்படுகிறது.