பிரபல விளையாட்டு வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீப காலமாக பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட பழம்பெரும் நடிகையான சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார். மேலும் கிரிக்கெட் வீரரான தோனி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை படம் உருவாகி வருகிறது. அதில் மாதவன், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற பிரபல பளுதூக்கும் வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கோனா பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கவிருப்பதாகவும், இதனை சஞ்சனா ரெட்டி இயக்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மல்லேஸ்வரியாக நடிக்க பிரபல ஹீரோயின்களான நயன்தாரா, திரிஷா மற்றும் அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில் தற்போது கர்ணம் மல்லேஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத்தி சிங்கை தேர்வு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் கர்ணம் மல்லேஸ்வரியின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கருதுவதாகவும், அதனாலேயே படக்குழுவினர் அவரை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. தற்போது ரகுல் ப்ரீத்தி சிங் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் .ஆனால் இதுவரை இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்படுகிறார். அங்கு ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…
சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…