அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து வாடிகன் வந்தடைந்தார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்…!
அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து வாடிகன் வந்தடைந்தார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்.
போப் பிரான்சிஸ் அவர்களுக்கு, பெருங்குடலில் அறிகுறி டைவர்டிகுலர் ஸ்டெனோசிஸ் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 4-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், இந்த அறுவை சிகிச்சை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த பாப் ஆண்டவர் பிரான்சிஸ் 10 நாட்களுக்கு பின் நேற்று சிகிச்சை முடிந்து நேற்று வாடிகன் திரும்பியுள்ளார். இதனையடுத்து, போப் ஆண்டவர் வருகிற செப்டம்பர் 12 முதல் 15 வரை ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.