போப் பிரான்சிஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி…!
போப் பிரான்சிஸ் அவர்கள், பெருங்குடலில் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போப் பிரான்சிஸ் அவர்கள், பெருங்குடலில் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி அவர்கள் கூறுகையில், பெருங்குடலின் “அறிகுறி டைவர்டிகுலர் ஸ்டெனோசிஸ்” க்கு சிகிக்சை அளிக்கப்படவுள்ளது.
டைவர்டிகுலர் ஸ்டெனோசிஸ் என்பது, மீண்டும் மீண்டும் வயிற்று வலி, வீக்கம் மற்றும் குடல் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். போப்ஸ் மருத்துவ சிகிச்சை பெறும் நிறுவனமான ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பின் அறுவை சிகிச்சை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
போப் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன், ஞாயிற்றுக்கிழமை செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றினார். அப்போது, செப்டம்பர் மாதம் ஸ்லோவாக்கியாவுக்கு செல்வதாக போப் அறிவித்தார். 2013-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் தற்போது தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.