குடல் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போப் ஆண்டவர் உடல் நிலையில் முன்னேற்றம்…!
குடல் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போப் ஆண்டவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் அவர்களுக்கு, பெருங்குடலில் அறிகுறி டைவர்டிகுலர் ஸ்டெனோசிஸ் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், இந்த அறுவை சிகிச்சை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று உள்ளது. இதுகுறித்து செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூனி கூறுகையில், போப்பாண்டவர் விரைந்து குணமடைந்து வருவதாகவும், உணவு உட்கொள்ள தொடங்கி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு பின் நேற்று முதல் முறையாக சிறிதளவு நடைபயிற்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ள நிலையில், மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுப்பார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.