படத்தில் சூரியை வேற மாறி பாப்பிங்க – சூரி..!!
விடுதலை படத்தில் வேற மாறி சூரியை பார்ப்பீர்கள் என அவரே சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இயக்குனர் வெற்றி மாறன் அடுத்ததாக அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி , சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை தழுவி உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார்.
மேலும் இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் நடிகர் சூரி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் சூரி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார். இதில் அவர் பேசியது ” அண்ணன் வெற்றி மாறன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிக பெரியது. இந்த விடுதலை படத்தில் வேற மாறி சூரியை பார்ப்பீர்கள். நானே என்னை வேற மாதிரி பார்ப்பேன். வெற்றிமாறனிடம் ஒரு லைன் தான் கேட்டேன். உடனே ஓகே சொல்லிட்டேன். அடுத்த வருடம் கொஞ்சம் பிசியாக இருப்பேன் என்று நினைக்கிறன்” என்று கூறியுள்ளார்.