தாய்லாந்தில் ரூ.10 கோடிக்கு சொந்தமான ஏழை மீனவர்…!
ஏழை மீனவர் ஒருவர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது, மிகவும் அரிதான ஆரஞ்சு நிறத்தில் மேலோ வகையிலான முத்துக்கள் கிடைத்துள்ளது.
பொதுவாக மீன்வர்களைப் பொறுத்தவரையில் பல நாள் ஏழைகளாக கடலுக்குள் சென்றாலும், ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆக கூடிய வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் கடல் வளத்தை பொறுத்தவரையில் பல கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் நிறைந்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். சாதாரணமாக திமிங்கலத்தின் வாந்தி கூட பல கோடிகளுக்கு விற்பனையாகும்.
அந்தவகையில் தாய்லாந்து நாட்டில் ஏழை மீனவர் ஒருவர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது, மிகவும் அரிதான ஆரஞ்சு நிறத்தில் மேலோ வகையிலான முத்துக்கள் கிடைத்துள்ளன. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 10 கோடி ரூபாய் ஆகும். இதனால் ஏழை மீனவரான அவர் ஒரே நாளில் 10 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.