பீஸ்ட் படத்தில் ஆக்சன் காட்சிகளை கொடுத்தால் அதில் நான் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதனை தொடர்ந்து தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களுக்கு நல்ல வெற்றியை பெறவே அடுத்தடுத்து பெரிய ஹீரோ படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக சென்னையில், நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் நேர்காணலில், “பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு இயக்குனர் நெல்சன் ஆக்சன் அதிரடி காட்சிகளை எழுதியுள்ளார். அதே போல எனக்கும் சில ஆக்சன் காட்சிகளை கொடுத்தால் அதில் நான் நடிக்க ஆர்வமாக உள்ளேன். என கூறியுள்ளார். பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவின் விருப்பத்தை ஏற்று அவருக்கு சில சண்டை காட்சிகளை கொடுப்பாரா இயக்குனர் நெல்சன் என பொறுத்திருந்து பாப்போம்.
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…
பஞ்சாப் : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…