தளபதி-65 படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் குறித்து பூஜா ஹெக்டே மனம் திறந்துள்ளார்.
தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அவரே அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
மேலும் ‘தளபதி65’ படத்தில் பிரபல காமெடி நடிகர்களான யோகி பாபு மற்றும்VTV கணேஷ் ஆகியோரும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அல்லது ரஷ்மிகா மந்தானா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தளபதி 65 படத்தினை குறித்து சமீபத்தில் பூஜா ஹெக்டே நேரலை ஒன்றில் மனம் திறந்துள்ளார்.அதில் தளபதி 65 இன் ஒரு பகுதியாக இருக்க முடிந்தால் அது நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.எனது அறிமுகம் தமிழில் தான் .எனவே நான் தொடங்கியதிலிருந்து விஜய்யுடன் நடிப்பது எனது நீண்ட நாள் ஆசை.எனவே நானும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பது நடக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…