ஜப்பான் பள்ளிகளில் போனிடெயில் சிகையலங்காரத்திற்கு தடை..!
இந்தியாவில் சில நாட்களாக கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் பெண்கள் ஹிஜாப் அணிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு குறித்து அடிக்கடி சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கிடையில், ஜப்பான் நாட்டில் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய ஆடைக் கட்டுப்பாடுகளை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பல ஜப்பானிய பள்ளிகள் பெண்கள் போனிடெயில் சிகை அலங்காரம் செய்ய தடை விதித்துள்ளன.
இதற்கான காரணத்தை கேட்டால் திகைத்து போவீர்கள். மாணவிகளின் கழுத்தின் பின்புறம் மாணவர்களை பாலுறவு தூண்டும் என்று பள்ளிகள் நம்புகின்றன. இது தவிர, பள்ளிகளுக்கு மாணவிகள் வெள்ளை உள்ளாடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என பள்ளிகள் கூறுகின்றன.
இந்த விதி 10 பள்ளிகளில் ஒன்றில் பொருந்தும்:
2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஜப்பானின் ஃபுகுவோகா மாகாணத்தில் உள்ள 10 பள்ளிகளில் ஒரு பள்ளியில் பெண்களின் போனிடெயில் சிகை அலங்காரங்களுக்கு தடை விதித்துள்ளதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஜப்பானில் உள்ள பெற்றோர்களும், மாணவிகளும் இந்த ஆடைக் கட்டுப்பாடு குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்புக் குரல்களும் பல இடங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக, ஜப்பான் அரசு கல்வி விதிகளை சீர்திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.