மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.இதில் இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ், நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் மோகன் பாபு நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது.அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் வைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.அந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ரஹ்மான், பார்த்திபன் உள்ளிட்ட ஒரு சில நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர் .
ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.அந்த வகையில் தற்போது ஹைதராபாத்தில் மும்மரமாக நடைபெற்று வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாத இறுதிக்குள் முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .எனவே இந்த பிரமாண்ட படத்தின் அப்டேட் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. இந்நிலையில், 2ஆம்…
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…