மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் ரசிகர்கள் எடிட் செய்த போஸ்டர் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.இதில் இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ், நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் மோகன் பாபு நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது.அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் வைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.அந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ரஹ்மான், பார்த்திபன் உள்ளிட்ட ஒரு சில நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர் .
ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.அந்த வகையில் தற்போது ஹைதராபாத்தில் மும்மரமாக நடைபெற்று வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாத இறுதிக்குள் முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .எனவே இந்த பிரமாண்ட படத்தின் அப்டேட் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இதனை தொடர்ந்து ரசிகர்கள் எடிட் செய்த இந்த படத்திற்கான போஸ்டர் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த போஸ்டர்
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…