பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டருடன் புதிய தகவல் வெளிவந்துள்ளது.
பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.
மேலும், கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், மத்தியப்பிரதேசம், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தங்களது நடிப்பை முடித்து விட்டதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், இந்த படத்தின் படக்குழு பொன்னியின் செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தெரிவித்துள்ளனர். தற்போது புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த படம் வரும் 2022 ஆம் ஆண்டு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…
சென்னை : கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவருடைய படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசை எப்படி வரும் என்பது…
டெல்லி : 'ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி' என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின்…
உத்திரபிரதேசம் : மாநிலம் காஜியாபாத்தின் லோனியில் உள்ள ட்ரோனிகா நகரில் சோனு என்பவருடைய மகன் தீபான்ஷூவுக்கு சனிக்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது.…
சென்னை : விக்ரம் நடித்துள்ள வீரதீரசூரன் திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…