இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் இவரது கனவு படமாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவலை தமிழ் திரையுலகில் பலர் முயன்றனர் ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது. தற்போது அதனை மணிரத்னம் கையில் எடுத்துள்ளார்.
இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், அமிதாப்பச்சன், என பல திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்பட ஷூட்டிங் தாய்லாந்தில் உள்ள காடுகளில் நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்து தற்போது முதல் அதிகாரபூர்வ அப்டேட்டாக அப்படதில் வேலை செய்யும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு மட்டும் வெளியாகியுள்ளது.
இப்படத்தினை லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னம் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். கதை – கல்கி, திரைக்கதை – மணிரத்னம் & குமரவேல், வசனம் – ஜெயமோகன், இசை – ஏ.ஆர்.ரகுமான், கலை – தோட்டா தரணி, ஒளிப்பதிவு – ரவி வர்மன் என பல அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் பாடலாரசியர் வைரமுத்து பெயர் இதில் இல்லை. மேலும் வேறு பாடலாசிரியர் பெயரும் இல்லை. 10க்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கும் என கூறப்பட்ட நிலையில் இன்னும் பாடலாசிரியர் பெயர் அறிவிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…