வசூலில் வரலாற்று சாதனை படைத்த “பொன்னியின் செல்வன்”.! தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?
எழுத்தாளர் கல்கி எழுதி 70 வருடங்களுக்கு முன்பு பத்திரிக்கையில் வெளிவந்த புகழ்பெற்ற சரித்திர “பொன்னியின் செல்வன்” நாவலை இயக்குனர் மணிரத்தனம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார், பிரபு, ஜெயராம், ரகுமான் உள்ளிட்ட பலர பிரபலங்கள் இந்த படத்தில் ஒவ்வொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்களேன்- அஜித்தின் வாட்ஸ் ஆப் DP என்ன தெரியுமா..? தீயாய் பரவும் புகைப்படம்.!
இந்த படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் நல்ல விமர்சனங்களே கூறி வருகிறார்கள். அதைப்போல வசூலும் தாறுமாறாக குவிந்து வருகிறது.
இந்த நிலையில், படம் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதுவரை தமிழில் வெளியான எந்த படமும் தமிழகத்தில் 200 கோடி வசூல் செய்ததில்லை எனவே, வசூலில் பொன்னியின் செல்வன் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.