திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம்.! சிகிச்சைக்கு உதவிய உலகநாயகன்.!
பொன்னம்பலம் சிறுநீரக நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அவரின் சிகிச்சைக்கு கமல்ஹாசன் உதவியுள்ளார்.
ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமாகிய பொன்னம்பலம் நாளடைவில் சினிமாவில் நடிகராகவும் பிரபலமானார். தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்த இவர் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டார். இந்த நிலையில் தற்போது இவர் அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது சிகிச்சைக்கு கமல் உதவியதாகவும், தினமும் அவரிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது . மேலும் பொன்னம்பலம் அவர்களின் இரு குழந்தைகளின் படிப்பு செலவையும் கமல்ஹாசன் ஏற்று கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உதவிக்கு கமல்ஹாசனுக்கு பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.