ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்து விட்டு இது பெண்களுக்கான படம் அல்ல ,பாலியல்குற்றங்கள் செய்பவர்களுக்கான பாடம் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார் .
2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து இன்று 12 மணியளவில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகியது.
உலகளவில் ஓடிடியில் வெளியிடுவதற்கு முன்பு பல பிரபலங்களுக்காக முன்னோட்டம் ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றது. அதன் மூலம் பல பிரபலங்கள் பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்து பாராட்டி வந்தனர். அதில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான பாரதிராஜா படத்தை பார்த்து விட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் “கண்களை கலங்கடித்து விட்டது. இந்த பொன்மகள் வந்தாள் கண்டிப்பாக சமூகத்தை கலங்கடிக்கும். அரியாத வயதில் காமத்தை சுமந்து, வெளியில் சொல்லா முடியா வாழும், பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல, பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம். இயக்குநரின் இயக்கமும், ஜோதிகா அவர்களின் உணர்ச்சி சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள் என்று பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…