பொங்கல் பரிசு:பெரும் முறைகேடு-5 ரூபாய் கரும்புக்கு 15 ரூபாய் கணக்கு!தினகரன் பகீர் தகவல்
பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய், கடந்த 7-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.மேலும் ரூ.258 கோடியில் 2.02கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டதோடு அதனோடு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்நிலையில் இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.கரும்பு சந்தையில் ரூ.5க்கு விற்கப்படும் நிலையில் ரூ.15க்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது.அரிசி, சர்க்கரை எடைகுறைவாக உள்ளது. பொருட்களின் அடக்கவிலை யதார்த்தத்தை மீறி நிர்ணயம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.