பொங்கல் பண்டிகை…! தொடர்ந்து 6 நாள் லீவு! ஆனந்தத்தில் அரசு ஊழியர்கள்!
தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது அரசு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
இந்த வருடம் பொங்கல் வருகின்ற 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் நேற்று (ஜனவரி 7-ம் தேதி) முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9-ஆம் தேதி தொடங்குகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், சென்னையிலிருந்து ஜனவரி 11-ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை 14,263 பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனவரி 14ஆம் தேதி அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது . ஜனவரி 14ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய, வரும் பிப்ரவரி 9ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது .ஜனவரி 14ஆம் தேதி விடுமுறை என்பதால் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை விடுமுறை கிடைக்கிறது.
இதனால் மொத்தம் 6 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது அரசு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.