புது பானையில் பொங்கல் கொண்டாட்டம்…!!
பொங்கல் விடும் போது புது அரிசி, புதுப் பானை, புது அடுப்பு என எல்லாமே எல்லாமே புதுசாக தான் இருக்கும். பொங்கல் விடும் போது சிலர் வீட்டிற்கு வெளியே பொங்கல் வைப்பார்கள், சிலர் வீட்டு முற்றம் அல்லது வராண்டாவில் பொங்கல் வைப்பார்கள். பொங்கலுக்கு மண் பானையைத்தான் அதிகமானோர் பயன்படுத்துவார்கள். வசதி உள்ளவர்கள் வெங்கலப் பானையை பயன்படுத்துவார்கள். பொங்கல் விடும் போது மொத்தம் இரண்டு அடுப்புகளில் பொங்கல் செய்வார்கள், ஒன்று வெண் பொங்கலுக்கு மற்றொன்று சர்க்கரை பொங்கலுக்கு. பொங்கல் பொங்கும் போது “பொங்கலோ… பொங்கல்…” என்று சில்வர் தட்டில் தட்டிக் கொண்டு குடும்பமே உற்சாக குரல் எழுப்பும்.