தாவூத் நீதிமன்றத்தில் சரண்!பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு விவகாரம் …
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் பெருமளவு முறைகேடு நிகழ்ந்துள்ளது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், முறைகேட்டில் தொடர்புள்ள கால்டாக்சி ஓட்டுநர் கணேஷ் என்ற நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஷேக் தாவூத் என்ற நபருக்கு இந்த முறைகேட்டில் முக்கியப் பங்கிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தலைமறைவான தாவூத்தை, 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், பொன்னேரி நீதிமன்றத்தில் நேற்று அவர் சரணடைந்தார். முறைகேடு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தாமதமாக புகார் அளித்ததே குற்றவாளிகளைப் பிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
source: dinasuvadu.com