அமெரிக்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தல் மிக முக்கியமானது எனவும், இந்த தேர்தலில் வெற்றி பெற்று நான் மீண்டும் அதிபராக வருவேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. ஆனால் அங்கு கொரோனா பரவி வரும் சூழலிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.அங்கு இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, அமெரிக்க ஊடகங்களும் தொடர்ந்து கருத்து கணிப்புகளை நடத்தி கொண்டே வருகிறது. இதுவரை நடந்த கருத்துக்கணிப்பில் அதிபர் டிரம்பை விட, முன்னாள் துணை அதிபரான ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பைடன் முன்னிலையில் உள்ளார்.
அதற்க்கு காரணம், மக்களுக்கு டிரம்ப் மீது ஏற்பட்ட அதிருப்தி. கொரோனா வைரஸை கையாண்ட விதம். நோய் பரவுவதை ஆரம்பத்தில் இருந்து கவனிக்காததே அது தற்பொழுது இந்தளவுக்கு வந்ததற்கு காரணம் என மக்கள் சிலர் கூறிவருகின்றனர்.
அதுமட்டுமின்றி, டிரம்ப் ஆட்சிக்காலத்தில் அவர் எடுத்த சில முடிவுகள், அவரின் புகழை பெரிதளவில் குறைத்து. மேலும், ஜார்ஜ் பிலோய்ட் கொலை வழக்கில் டிரம்பின் சர்ச்சைகுரிய பேச்சு மற்றும் கறுப்பின மக்களுக்கு எதிரான செயல்கள், அமெரிக்க மக்களுக்கே முன்னுரிமை, போன்ற கொள்கைகளே மக்கள் டிரம்பை எதிர்க்க காரணமாக அமைந்தது.
இந்நிலையில், தற்பொழுது நடக்கவுள்ள அதிபர் தேர்தல் மிக முக்கியமானது எனவும், இந்த தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தனது ஆட்சியில் யாரும் செய்யாத பல்வேறு சாதனைகளை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2016ம் ஆண்டு தேர்தலில் வெற்றியை சந்தித்தது போல் இந்த தேர்தலிலும் நடக்கும் எனவும், நான் மீண்டும் அதிபராக வருவேன் என நம்புகிறேன். சில கருத்துக்கணிப்புகள் பொய்யாகும் என தெரிவித்த அவர், தேர்தல் சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி பெறுவேன் என தெரிவித்தார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…