அரசியல்வாதியாக ” சிங்கம்” விஜய் சேதுபதி.! துக்ளக் தர்பார் மூவி ஸ்டில்ஸ்.!

துக்ளக் தர்பார் படத்திலுள்ள விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் துக்ளக் தர்பார்.இந்தப் படத்தில் அதிதிராவ் ஹைத்ரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள விஜய் சேதுபதியின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வெள்ளை சட்டை மற்றும் வேட்டியில் பக்கா அரசியல் வாதியாக உள்ள அந்த புகைப்படங்களை மக்கள் செல்வனின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
#TughlaqDurbar Stills ☺️@Lalit_SevenScr @7screenstudio @DDeenadayaln @rparthiepan pic.twitter.com/tGbrKibAAa
— VijaySethupathi (@VijaySethuOffl) July 9, 2020