சுய லாபத்திற்காக அரசியல் கட்சிகள் தூண்டி விடுகின்றனர் : ரஜினிகாந்த்
- சுய லாபத்திற்காக அரசியல் கட்சிகள் தூண்டி விடுகின்றனர்.
- இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு என் பிரச்சானை வந்தாலும் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் சரியாக வருமான வரி செலுத்துபவன். நான் சட்ட விரோதமாக எந்த செயலும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தூத்துக்குடி துப்பாயாக்கி சூடு விவகாரம் தொடர்பாக தனக்கு இன்னும் சம்மன் வரவில்லை என தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் எனபது தெரியவரும்.
மேலும், இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு என் பிரச்சானை வந்தாலும் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன் எனக் கூறியுள்ளார்.