இந்திய அணி ஜெர்ஸிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள் !
இந்த வருட உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும். இந்நிலையில் இந்திய அணி தனது ஆறாவது போட்டியை இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத உள்ளது.
இப்போட்டியை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி தனது ஏழாவது போட்டியில் இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. இப்போட்டியில் இந்திய தனது ஜெர்ஸியை மாற்றி விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நீல நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடி வருகிறது. இந்த உலக கோப்பை தொடரில் ஐசிசி ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஒரே நிறத்தில் கொண்ட இரு அணியில் விளையாடும் போது ஒரு அணி வேறு ஒரு நிறம் கொண்ட ஜெர்ஸியை பயன்படுத்தி விளையாட வேண்டும்.
அதன்படி நீலம் மற்றும் பச்சை ஜெர்ஸியை கொண்டு அணிகள் தான் சிக்கலில் மாட்டி கொண்டது.இதில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அதே ஜெர்ஸியைஅணிந்து போட்டிகலில் விளையாடலாம் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்துடன் இந்திய மோதவுள்ளது. அப்போது இந்திய அணி நீல நிற ஜெர்ஸிக்கு பதிலாக ஆரஞ்சு நிற ஜெர்ஸியை கொண்டு விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய அணி ஆரஞ்சு ஜெர்ஸியை கொண்டு விளையாடுவதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.