லக்னோவில் இரு குடும்பத்தார் சம்மதத்துடன் நடந்த திருமணத்தை நிறுத்திய போலீசார்!
லக்னோவில் இரு குடும்பத்தார் சம்மதத்துடன் நடந்த திருமணம் மதமாற்ற தடுப்பு சட்டத்திற்கு எதிராக இருந்ததால் போலீசார் அந்த திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
லக்னோவில் இந்து பெண்மணி ஒருவருக்கும் முஸ்லீம் மதத்தினை சேர்ந்த ஆணுக்கும் இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்க்கான ஏற்பாடுகள் பாதி முடிவடைந்த நிலையில் போலீசார் இந்த திருமணத்தை கடைசி நேரத்தில் சென்று நிறுத்தியுள்ளனர். அங்கு விழாவுக்கு வந்திருந்த உறவினர்களையும் உணவு கூட கொடுக்கவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.
திருமணம் முதலில் இந்து சடங்கு படியும் அதன் பின் முஸ்லீம் சடங்கு முறைப்படியும் நடைபெற்றுள்ளது. 2020 ஆம் ஆண்டு வந்த மதமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் திருமணம் நிறுத்தப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். லவ்ஜிஹாத்துக்கு எதிராக இந்த சட்டம் செயல்படுகிறது. திருமணம் நிறுத்தப்பட்டதால் இரு குடும்பத்தினரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளனர். மேலும், இது குறித்து பேசிய முஸ்லீம் மதகுரு ஒருவர், நாங்கள் பயந்த காலம் அதற்குள் வந்துவிட்டதா? காவலர்கள் நாட்டை ஆளுகிறார்கள் என கூறியுள்ளார்.