கருப்பின சிறுமி மீது பெப்பர் ஸ்பிரே அடித்த போலீசார் – அமெரிக்காவில் வலுக்கும் கண்டனம்!

Default Image

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கருப்பின சிறுமி ஒருவர் மீது போலீசார் பெப்பர் ஸ்பிரே அடித்த சம்பவம் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கருப்பர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 9 வயது மட்டுமே ஆகக் கூடிய கருப்பின சிறுமி ஒருவர் தன்னுடைய தாயை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கம் கொண்டிருந்ததாக போலீசார் கடுமையாக அச்சிறுமியை தாக்கியுள்ளனர்.

மேலும், அச்சிறுமியை கீழே போட்டு பெப்பர் ஸ்பிரேயை முகத்தில் அடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியதை அடுத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. இதனையடுத்து போலீசார் பலவந்தமாக செய்த இந்த செயல் குறித்து அமெரிக்காவில் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்