இலங்கையில் காலி முகத் திடலை விட்டு வெளியேற காவல்துறை உத்தரவு!

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், அமைதியை நிலைநாட்ட காவல்துறை நடவடிக்கை.
இலங்கையில் அதிபர் கோட்டாபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு எழுத்துபூர்வமான உத்தரவை பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கியமான இடமாக காலி முகத் திடல் பார்க்கப்படுகிறது. அங்கு மக்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதனால் அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், அமைதியை நிலைநாட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் சுட்டு தள்ளுமாறு முப்படையினருக்கும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், இலங்கையில் கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற வன்முறையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025