“தி காஷ்மீர் பைல்ஸ்” படம் பார்க்க போலீசாருக்கு விடுமுறை.! எந்த மாநிலத்தில் தெரியுமா.?
இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. இந்த திரைப்படத்தை ஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதை சித்தரிக்கும் கதையை வைத்து மையமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது . இந்த அற்புதமான படத்தை இயக்கிய இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மற்றும் படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.
இதனையடுத்து “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தைப் பார்ப்பதற்காக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக மாநிலத்தில் கேளிக்கை வரியில் இருந்து இந்த படத்துக்கு விலக்கு அளிக்க உள்ளதாக மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நேற்று அவர் தனது டுவிட்டரில், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் இந்துக்களின் வலி, காஷ்மீரி பண்டிட்கள் எதிர்கொள்ளும் போராட்டம் மற்றும் அதிர்ச்சியின் கதை, இதயத்தை உலுக்கும் கதை. அதை மாநிலத்தில் உள்ள அதிகபட்ச மக்கள் பார்க்க வேண்டும்”. என கூறியுள்ளார்.
#MadhyaPradesh: Home Minister @drnarottammisra has instructed @DGP_MP to sanction one day leave to policemen to watch #KashmirFiles along with their family members. @vivekagnihotri pic.twitter.com/F3agpnIVmB
— Free Press Journal (@fpjindia) March 14, 2022