திமுகவுக்கு காவல்துறை நோட்டீஸ்.!
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இன்றுடன் முடிய இருந்த ஊரடங்கு அடுத்த மாதம் 03-ம் தேதி வரை பிரதமர் மோடி நீடித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய , மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
இதையெடுத்து நாளை கொரோனா வைரஸ் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யபட்டிருந்த நிலையில் திமுகவுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கட்சி தலைவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து கூட்டத்தை நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.
காணொலி காட்சி மூலம் கூட்டத்தை நடத்தலாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.