அப்பாவைப் போலவே துருவ் விக்ரம் இருக்கிறார் – வாணி போஜன்.!

விக்ரம் மற்றும் துருவ் விக்ரமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியுள்ளார் நடிகை வாணி போஜன் பேசியுள்ளார்.
தெய்வமகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “மகான்” படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது ” படப்பிடிப்பில் விக்ரம் சாரின் நடிப்பை பார்த்து வியந்தேன். அவரின் எனர்ஜியை பற்றி நான் நிறைய இடத்தில் கேள்விப் பட்டிருக்கிறேன். அவருடன் பணியாற்றியது மிகவும் சந்தோசம் அதைப்போல் துருவ்வுடன் பணியாற்றுவதும் நன்றாக இருந்தது ஆதித்யா வர்மா படத்தில் அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது அவரது அப்பாவைப் போலவே அவர் இருக்கிறார்.” என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025