ஜோதிகா புகார் கூறிய அந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் சங்க ஒருவரை பாம்பு ஒன்று தீண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் எதிரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதி இல்லை என்றும், குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான எந்த வசதிகளும் இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும் நீங்கள் தஞ்சை பெரிய கோவில் உட்பட பல கோயில்களில் உண்டியலில் காசு போடுவதை போன்று பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் காசு கொடுங்கள். ஏனெனில் அவையாவும் பராமரிக்கப்படுவது மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த பேச்சிற்கு பல நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்து மதத்திற்கு எதிராக பேசியதாக கூறி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் சிலர் ஜோதிகா அவர்கள் எந்த மதத்திற்கும் ஆதரவாக பேசவில்லை என்றும், பள்ளி, மருத்துவமனைகளுக்கும் கோவிலுக்கு நிதியுதவி வழங்கி பராமரிப்பதை போன்று அதற்கும் நிதியுதவி வழங்கி பராமரியுங்கள் என்று தான் கூறினார் என்றும் அவருக்கு ஆதரவாக பேசி விளக்கமளித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ஜோதிகா புகார் கூறிய அந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் சங்க ஒருவரை பாம்பு ஒன்று தீண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரான கோவிந்தராவ் உத்தரவின் பேரில் அந்த அரசு மருத்துவமனையை ஜேஸிபி மூலம் சுத்தம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த மருத்துவமனை வளாகத்தில் சுமார் பத்து பாம்புகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். அவற்றுள் 5பாம்புகள் கொடூர விஷத்தன்மை கொண்டது என்பது தெரிய வந்துள்ளது. அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் இந்த செய்தியை கேட்டதும் அச்சத்தில் உள்ளாகியுள்ளனர்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…