ஜோதிகா புகார் செய்த மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள்..!

Default Image

ஜோதிகா புகார் கூறிய அந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் சங்க ஒருவரை பாம்பு ஒன்று தீண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் எதிரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதி இல்லை என்றும், குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான எந்த வசதிகளும் இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும் நீங்கள் தஞ்சை பெரிய கோவில் உட்பட பல கோயில்களில் உண்டியலில் காசு போடுவதை போன்று பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் காசு கொடுங்கள். ஏனெனில் அவையாவும் பராமரிக்கப்படுவது மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த பேச்சிற்கு  பல நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்து மதத்திற்கு எதிராக பேசியதாக கூறி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் சிலர் ஜோதிகா அவர்கள்  எந்த மதத்திற்கும் ஆதரவாக பேசவில்லை என்றும், பள்ளி, மருத்துவமனைகளுக்கும் கோவிலுக்கு நிதியுதவி வழங்கி பராமரிப்பதை போன்று அதற்கும் நிதியுதவி வழங்கி பராமரியுங்கள் என்று தான் கூறினார் என்றும் அவருக்கு  ஆதரவாக பேசி விளக்கமளித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ஜோதிகா புகார் கூறிய அந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் சங்க ஒருவரை பாம்பு ஒன்று தீண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரான கோவிந்தராவ் உத்தரவின் பேரில் அந்த அரசு மருத்துவமனையை  ஜேஸிபி மூலம் சுத்தம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த மருத்துவமனை வளாகத்தில் சுமார் பத்து பாம்புகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். அவற்றுள் 5பாம்புகள் கொடூர விஷத்தன்மை கொண்டது என்பது தெரிய வந்துள்ளது. அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் இந்த செய்தியை கேட்டதும் அச்சத்தில் உள்ளாகியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்