பொடுகு தொல்லையை போக்கும் வெந்தயம்…..!!!
இன்றைய பெண்களின் பெரிய தொல்லையே பொடுகு தொல்லை தான். பொடுகு தொல்லையிலிருந்து விடுபெறுவதற்கு வழி தெரியாமல் பல வகையான மருந்துகள் மற்றும் ஷாம்புகளை பயன்படுத்துகிறோம் இதனால் நம் உதிர்வு மற்றும் சில விளைவுகளை தவிர முன்னேற்றம் தெரிவதில்லை.
செய்முறை :
நான்கு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை இலேசாக சூடாக்கி மிக்சியில் பொடித்து வெந்நீரில் ஊறவைக்கவும். நன்கு ஊறிய பிறகு, அதனுடன் கால் கப் தயிர் கலந்து தலையில் தடவி, 15 நிமிடம் ஊறவிட்டு அலசவும், பொடுகு உடனே நீங்கி விடும்.