மகிந்தா ராஜபக்சே நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு!
முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கூட்டுக்குழுவாக இணைந்து கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்கேவின் தவறான பொருளாதார கொள்கைகளால், இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருப்பதாக எதிர்க்கட்சி கூட்டுக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். இலங்கை சென்ட்ரல் வங்கி பாண்டுகளை((Bonds)), 2015 மற்றும் 2016ல் வழங்கியபோது முறைகேடு நடைபெற்றதாகவும், சிங்கப்பூரைச் சேர்ந்த அர்ஜூன் மகேந்திரனை சென்ட்ரல் வங்கி கவர்னராக நியமித்து இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
எனவே, பிரதமர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக, ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த சிலரும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த தீர்மானத்திற்கு முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவும் ஆதரவளித்திருக்கிறார். இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்த 225 உறுப்பினர்களில், ஆளும் கூட்டணிக்கு 156 பேர் உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.