ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு…!
குவாட் உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகாவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அவர்கள் நான்கு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று வாஷிங்டனில் இந்த உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பதாக அம்மாநாட்டிற்கு வந்துள்ள பல்வேறு முக்கிய தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், இஸ்ரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரை சந்தித்து பேசிய பிரதமர் ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகாவையும் சந்தித்து பேசியுள்ளார். இரு தலைவர்களும் வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் சில முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
Furthering friendship with Japan.
Prime Ministers @narendramodi and @sugawitter had a fruitful meeting in Washington DC. Both leaders held discussions on several issues including ways to give further impetus to trade and cultural ties. pic.twitter.com/l370XzB1Yt
— PMO India (@PMOIndia) September 23, 2021