தவானுக்கு ட்விட்டரில் ஆறுதல் கூறிய பிரதமர் மோடி !
உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.ஒரு போட்டி மழையால் ரத்தானது.நாளை ஆப்கானிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோத உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி விளையாடியது.அப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் வீசிய பந்தில் தவானுக்கு இடது கை பெரும் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அப்போட்டியில் அவருக்கு பதிலாக ஜடேஜா இறங்கினர். பிறகு நடந்த போட்டிகளில் தவான் விளையாடவில்லை.இந்நிலையில் தவானுக்கு காயம் சரியாகாது நிலையில் உலகக்கோப்பை போட்டியில் இருந்து தவான் விலகுவதாக பிசிசிஐ அறிவித்தது.
தவான் உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது.ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்திய அணி வீரர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தாவன் தனது ட்விட்டரில் ஒரு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் எதிர்பாராதவிதமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்டு விட்டது. நம் நாட்டிற்காக உலகக்கோப்பையில் விளையாட ஆசைப் படுகிறேன். சிகிக்சை காரணமாக வெளியேற வேண்டிய நிலைமை வந்து விட்டது என கூறினார்.
Dear @SDhawan25, no doubt the pitch will miss you but I hope you recover at the earliest so that you can once again be back on the field and contribute to more wins for the nation. https://t.co/SNFccgeXAo
— Narendra Modi (@narendramodi) June 20, 2019
இதற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டரில் “தவான் உங்களை மைதானம் இழந்து தவிக்கிறது. நீங்கள் விரைவில் குணமாகி மீண்டும் நாட்டுக்காக நிறைய வெற்றிகளை பெறுவீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.