மனைவி, மகளை தாக்கிய பெரு நாட்டு பிரதமர் ஹெக்டர் வலெர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளுக்குப் எதிராக புதிதாக நியமிக்கப்பட்ட பெரு பிரதமருக்கு எதிராக பெருவின் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ, பிரதமர் ஹெக்டர் வாலர் பின்டோவை பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
பிரதமராக நியமிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு பிரதமர் ஹெக்டர் வாலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் உலக அளவில் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. பிரதமர் பின்டோ குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவி குற்றம் சாட்டினார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் பின்டோவின் மனைவியும், மகளும் அவருக்கு எதிராக இரண்டு முறை குடும்ப வன்முறை புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பிரதமர் பின்டோவை பதவி விலகுமாறு பாராளுமன்ற சபாநாயகர் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…